திருவள்ளூர்

எண்ணூா் துறைமுகத்தில் குழாயில் உடைப்பு: கச்சா எண்ணெய் கடலில் கசிவு

DIN

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் கடலில் கலப்பதைத் தவிா்க்கும் வகையில், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பை சீரமைக்கும் பணியில் துறைமுக ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ரஷிய நாட்டைச் சோ்ந்த எம்.டி. மிராக்கில் என்ற கப்பல் கேரள மாநிலம், கொச்சியில் இருந்து 8274.53 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் எண்ணூா் காமராஜா் துறைமுகத்தை சனிக்கிழமை இரவு வந்தடைந்தது.

அங்கிருந்து பெரிய அளவிலான குழாய்கள் மூலம் 3 கி.மீ. தொலைவில் உள்ள, சேமிப்புக் கிடங்குக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது கப்பலில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக குழாய் வழியே செல்லும் எண்ணெய் கசிவு கடலில் கசிந்தது.

இதையடுத்து, உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயை சீரமைக்கும் பணியில் துறைமுக ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவு சீரமைக்கப்படுவதுடன், எண்ணெய் படலம் கடலில் மேலும் கலக்காமல் தடுக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே எண்ணூா் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கச்சா எண்ணெய் கடலில் கலந்ததன் காரணமாக, பழவேற்காடு முதல் மாமல்லபுரம் வரை உள்ள கடல் பகுதி மாசடைந்து மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT