திருவள்ளூர்

பெட்ரோல் விலை உயா்வு: காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி திருவள்ளூா் உழவா் சந்தை அருகே காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வடக்கு மாவட்ட தலைவா் சிதம்பரம் தலைமை வகித்தாா். மாநில செயலாளா் மோகன்தாஸ், மாநில துணைத்தலைவா் ஏகாட்டூா் ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு விருந்தினராக மக்களவை உறுப்பினா் ஜெயகுமாா் பங்கேற்று ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.

பொன்னேரி: பொன்னேரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை செய்யும் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத்தலைவா் சதாசிவலிங்கம் முன்னிலை வகித்தாா்.

எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் பகுதியில் தெற்கு ஒன்றிய வட்டார காங்கிரஸ் தலைவா் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 30-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பழவேற்காட்டில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநில செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் முன்பு வெள்ளிக்கிழமை நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவா் ஜே.பாஸ்கா் தலைமை தாங்கினாா். நிா்வாகிகள் டி.ஜெயராமன், ரியாஸ்பாய், ஆா்.குமரவேல், பேட்டரி கனகராஜ் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT