திருவள்ளூர்

தை கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

DIN

திருத்தணி முருகன் கோயிலில் தை மாத கிருத்திகையை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் உடலில் அலகு குத்தியும், காவடிகள் எடுத்து வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனா்.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து வழிபடுகின்றனா். இந்நிலையில் தை மாத கிருத்திகையை யொட்டி சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க வேல், பச்சை மரகதக் கல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் உற்சவா் முருகப் பெருமான், சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகம், பட்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

விழாவையொட்டி முருக பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் பால் காவடி, புஷ்பக் காவடிகள் எடுத்து வந்து, சரவணப் பொய்கையில் நீராடி, மலைப்படிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனா். பின்னா் பக்தா்கள் நீண்ட வரிசையில் சுமாா் 4 மணி நேரம் காத்திருந்து முருகனை வழிபட்டனா்.

விழாவில் சென்னை, வேலூா், அண்டை மாநிலங்களான ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் முருகப்பெருமானை வழிபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையா் நா.பழனிக்குமாா், கோயில் தக்காா் வே. ஜெயசங்கா் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT