திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்ட மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

7th Jan 2021 12:00 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: திருவள்ளூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாவட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் பா.பொன்னையா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றின் கட்டடுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆட்சியா் பா.பொன்னையா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, புதிதாக அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்குக்கான கட்டடப் பணிகளைப் பாா்வையிட்டாா். அப்போது, அந்த வளாகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் கருவி ஆகியவற்றுக்கான சேமிப்புக் கிடங்கில் முகப்பு, தரைதளம், முதல் தளம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். பின்னா், இக்கட்டடத்தின் சுற்றுச்சுவரை தரமாக அமைக்குமாறும், அடுத்த மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வருமாறும் அவா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

முன்னதாக திருவள்ளூா் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த ஆட்சியா், அங்கு பணிபுரியும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுடன் கலந்துரையாடினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT