திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை அருகே பொங்கல் பண்டிகைக்காக மண்பானை செய்யும் பணி தீவிரம்

3rd Jan 2021 06:35 PM

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த அகரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் பானை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
களிமண்ணை கொண்டு வந்து குழைத்து காய வைத்து பதப்படுத்தி அதனை சக்கரத்தில் சுழற்றி பானை வடிவில் எடுத்து பின்னர் சூளை அமைத்து தீ மூட்டி அவற்றை வேக வைக்கின்றனர். மண் பானைகள் மட்டுமின்றி சட்டிகளும் செய்யப்பட்டு வருகின்றன. 
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த கோடை காலத்தில் விற்பனை முற்றிலும் சரிந்து தொழில் நலிவடைந்து இருந்ததாகவும், தற்போது பொங்கல் பண்டிகை நேரத்தில் மண்பானை விற்பனை மீண்டும் பொலிவு பெறுமா என மண்பாண்ட தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
 

Tags : Tiruvallur
ADVERTISEMENT
ADVERTISEMENT