திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் திமுக ஆர்ப்பாட்டம்

22nd Feb 2021 02:40 PM

ADVERTISEMENT

திமுக சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து கும்மிடிப்பூண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. நிகழ்வை ஒட்டி கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் இருந்து மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு பேரணியாக கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் வரை சென்றனர்.  தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி. வேணு, ஏழை எளிய மக்களின் அன்றாட பயன்பாட்டிலுள்ள பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை  உயர்த்திய மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றார்.  மேலும் ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சி.எச்.சேகர், பொறுப்புகுழு உறுப்பினர்கள் இ.ஏ.பி.சிவாஜி, பகலவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, டாக்டர் பரிமளம், அன்புவாணன், நிலவழகன், வழக்கறிஞர் வெங்கடாசலபதி, கோதண்டன், சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதா முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ADVERTISEMENT

ஆர்ப்பாட்டத்தில் தலைமை உரையாற்றிய மாவட்ட பொறுப்பாளர் டி. ஜே. கோவிந்தராஜன் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் கடுமையாக ஏற்றியதால் காய்கறி வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், பல்வேறு விதமான தொழில் செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கட்டுமான தொழில்களும் தினந்தோறும் பயன்படுத்தப்படும் காய்கறி உள்ளிட்டவைகளின் விலை கிடுகிடுவென ஏறியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் எரிபொருள் விலையை உயர்த்தி உள்ளது. இது மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை காட்டுகிறது என்றும், இதனை பாஜக கூட்டணி தமிழக அதிமுக அரசும் கண்டுக்கொள்ளாமல் மத்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு துணை போகிறது என்றார்.

நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், செல்வசேகரன், ரமேஷ்ராஜ், சுகுமாறன், சக்திவேல், பேரூர் செயலாளர்கள் அறிவழகன், மோகன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, ஜோதி, ஜெயந்தி கஜா, அமலா சரவணன், ஜெயச்சந்திரன், திமுக மாவட்ட நிர்வாகி நேமள்ளூர் மனோகரன் திருமலை, பாஸ்கரன், ஒன்றிய பிரதிநிதி ராகவரெட்டிமேடு ரமேஷ், நமச்சிவாயம், பரத்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT