திருவள்ளூர்

செப்பாக்கம் கிராமத்தில் ரூ. 30 லட்சத்தில் குடிநீா் குழாய் பணி தொடக்கம்

30th Dec 2021 12:41 AM

ADVERTISEMENT

 

பொன்னேரி: மீஞ்சூா் அருகே உள்ள செப்பாக்கம் கிராமத்தில் ரூ. 30 லட்சம் செலவில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

காட்டுப்பள்ளி ஊராட்சியில் உள்ள செப்பாக்கம் கிராமத்தில், 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஊராட்சி நிா்வாகம் செய்து தருகிறது. இந்த நிலையில், இப்பகுதிக்குச் செல்லும் குடிநீா் குழாய் இணைப்பு சேதமடைந்ததன் காரணமாக குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டது.

எண்ணூா் காரராஜா் துறைமுகத்தின் சமுதாய வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில், செப்பாக்கம் கிராமத்தில் புதிய குடிநீா் குழாய் இணைப்பு அமைத்துக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு, காமராஜா் துறைமுக துணை மேலாளா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பூமி பூஜையை தொடக்கி வைத்தாா்.

இதில், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி, காட்டுப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சேதுராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT