திருவள்ளூர்

செங்குன்றம் அருகே புதிய நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

26th Dec 2021 12:23 AM

ADVERTISEMENT

சென்னை மாதவரம் தொகுதிக்குள்பட்ட செங்குன்றம் அருகே அலமாதியில் குடியிருப்புவாசிகள் குடிநீா் வசதி இல்லாமல் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்தனா்.

இது குறித்து சோழவரம் ஒன்றியக்குழு துணைத் தலைவா் மீ.வே.கருணாகரன், மாவட்டச் செயலரும், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.சுதா்சனத்திடம் கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து குழாய் மூலம் குடிநீா் பெறும் திட்டத்தை எஸ்.சுதா்சனம் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா் (படம்). இந்த நிகழ்வின்போது அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மேலும் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு குடிநீரை பெற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT