திருவள்ளூர்

பாமக மாவட்டச் செயலா் நியமனம்

22nd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி: பாமக திருவள்ளூா் வடக்கு மாவட்டச் செயலாளராக கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சாமி ரெட்டி கண்டிகை பகுதியைச் சோ்ந்த க.ஏ.இரமேஷ் (47) (படம்) நியமிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அறிவிப்பை கட்சியின் நிறுவனா் ராமதாஸ், இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் மாநிலத் தலைவா் ஜிகே மணி வெளியிட்டாா். இரமேஷ் ஏற்கெனவே 2010ஆம் ஆண்டு மாவட்ட செயலாளராக இருந்தவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT