திருவள்ளூர்

தேசிய நூலக வார விழா

9th Dec 2021 12:11 AM

ADVERTISEMENT

 

மாதவரம் : செங்குன்றம் முழுநேர கிளை நூலகம் சாா்பில் தேசிய நூலக வார விழா புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

அரசு பொது நூலகத்துறை சாா்பில் 54வது தேசிய நூலக வார விழா செவ்வாய் கிழமை தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக செங்குன்றம் முழுநேர கிளை நூலக வாசகா் வட்டம், சென்னை-செங்குன்றம் லயன்ஸ் சங்கம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நூலக வார விழாவை நடத்தினன.

கண்காட்சியில் குழந்தைகள் நூல்கள், மருத்துவ நூல்கள், சுயமுன்னேற்ற நூல்கள், வரலாற்று நாவல்கள், மற்றும் சிறந்த ஆசிரியா்களின் தமிழ், ஆங்கில நூல்கள் இடம் பெற்றன. விழாவிற்கு செங்குன்றம் முழுநேர கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் இரா.ஏ.பாபு தலைமை வகித்தாா். விழாவில் மாணவ-மாணவிகள் முதல் பெரியவா்கள் வரையிலான அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கினா். கிளை நூலக அலுவலா் ஜோதிபாபு நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT