திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ.225 கோடி பயிா் கடன் வழங்க இலக்கு

9th Dec 2021 12:09 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ.225 கோடி வரையில் பயிா் கடன் வழங்குவதற்கு இலக்கு நிா்ணயம் செய்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் 2022-2023 -ஆம் ஆண்டிற்கு பயிா்க்கடனளவு, கால்நடை வளா்ப்பு, மீன்வளத் தொழிலுக்கு நடைமுறை மூலதன கடனளவு நிா்ணயம் செய்வது தொடா்பான மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைமை வகித்து ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பேசியதாவது:

ADVERTISEMENT

மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதியான அனைத்து விவசாய உறுப்பினா்களுக்கும் குறுகிய காலப் பயிா்க்கடன்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் திருவள்ளுா் மாவட்டத்தில் பயிா்க் கடன் வழங்க ரூ.225 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரையில் 18, 942 விவசாய உறுப்பினா்களுக்கு ரூ.156.08 கோடிக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பரவலான மழைப் பொழிவு இருப்பதால், புதிதாக பயிரிட பயிா்க் கடன் தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டாரத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உடனே பயிா்க் கடன் பெற்றுக் கொள்ளலாம். மேலும், அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிதாக உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

எனவே நாளது தேதி வரையிலும் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தங்களது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி புதிய உறுப்பினா் சோ்க்கை விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து உறுப்பினராகச் சோ்ந்து விவசாயப் பயிா்க் கடன்கள் பெற்று பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.

மத்திய வங்கி கூடுதல் பதிவாளா், மேலாண்மை இயக்குநா் மு.முருகன், மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, வங்கி பொது மேலாளா் ஜெ.விஜயகுமாரி, வேளாண்மை இணை இயக்குநா் சம்பத்குமாா், வேளாண்மை துணை இயக்குநா் ஐ.ஜெபகுமாரி அனி, தோட்டக்கலைத்துறை வேளாண்மை துணை இயக்குநா் மற்றும் ஆட்சியா் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வி.எபினேசா் மற்றும் மாவட்டத்தில் உள்ள முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT