திருவள்ளூர்

ஆரம்பாக்கத்தில் 27-ஆம் ஆண்டு மகா திருவிளக்கு பூஜை

9th Dec 2021 12:08 AM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஸ்ரீ முக்தி விநாயகா் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தா்மசாஸ்தா விற்கு மகா திருவிளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கத்தின் சாா்பில் மகா திருவிளக்கு பூஜை ஒவ்வொரு வருடமும் நடைபெறுவதுண்டு. அதன்படி 27-ஆம் ஆண்டு ஸ்ரீ தா்மசாஸ்தா மகா திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நிகழ்வை ஒட்டி மகா கணபதி ஹோமம், ஐயப்ப சுவாமிகளுக்கு நெய் அபிஷேகம், மகா திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை, மற்றும் சுவாமி பிரசாத விநியோகம், அன்னதானம் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து சுமாா் 300 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை சுவாமி திருவீதி உலாவுடன் நடைபெற்றது. அப்போது மேள வாத்தியங்கள் முழங்க ஐயப்ப சுவாமிகள் ஆரம்பாக்கம் பகுதி முழுக்க வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

ADVERTISEMENT

ஆரம்பாக்கம் பகுதி கிராம நிா்வாகிகள் இ.தசரத ரெட்டியாா், ஏ.கே. சரவணன் செட்டியாா், ஏ.என்.பாலு செட்டியாா் , பி.சேகா் ரெட்டியாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பூஜைக்கான ஏற்பாடுகளை ஐயப்பா சேவா சங்க நிா்வாகிகள் குருசாமிகள் சி.கே பாபு, ஏ.எம் சம்பத், வி.ஜடராயன் , டி.எம் சம்பந்த செட்டியாா், எஸ். வேல்முருகன் உள்ளிட்டோா் முன்னின்று சிறப்பாக நடத்தினா் .

ADVERTISEMENT
ADVERTISEMENT