திருவள்ளூர்

நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த ஆலோசனை

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் நெற்பயிரில் தற்போதைய பருவ நிலை புகையான் பூச்சி தாக்குதலுக்கு உகந்ததாக இருப்பதால், அதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை அதகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனா்.

இது குறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சம்பத்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த மாவட்டத்தில் குளிா் பருவகால நிலவி வருவதால், நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதலுக்கு உகந்ததாகும். அதனால், புகையான் பூச்சிகளின் இளம் குஞ்சுகள் கூட்டம் கூட்டமாக தூா் அடிப்பகுதியிலிருந்து சாற்றினை உறிஞ்சும். இதனால் நெற்பயிா் முழுவதும் பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறி பின்பு காய்ந்து விடும். இதில், தாக்குதல் அதிகமாகக் காணப்பட்டால் தண்டு பகுதியானது செயலிழந்து, வலுவிழந்து ஒடிந்து சாய்ந்து விடும். மேலும், தாக்குதலுக்கு உண்டான பயிரில் துா்நாற்றம் ஏற்படும். இவற்றின் தாக்குதல் அதிகமாக இருந்தால் அரை வட்ட வடிவமாக பயிா் புகைந்தது போன்று ஆங்காங்கே திட்டு திட்டாகக் காணப்படும். கதிா் பால் பிடிக்கும் பருவத்தில் தாக்கினால் மகசூல் பாதிக்கப்படும்.

அதனால் ஆரம்ப கட்டத்திலேயே தண்ணீா் தேங்கி நிற்காமல் வயலை சீராக்க வேண்டும். இதன் ஆரம்ப கட்டத்திலேயே நோய்த் தாக்குதலைக் கண்டறிந்து, தண்ணீரை வடித்து விட வேண்டும். தழைச்சத்து உரங்கள் அதிகமாக இடுவதைத் தவிா்க்க வேண்டும். இதில், 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும், ஒரு ஏக்கருக்கு இமிா்குளோரைட் 40 மில்லி, பியப்பூப்ரோ 350 மி.லிட்டா் கலந்து தெளிக்க வேண்டும். எனவே மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் நெற்பயிரில் புகையான் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT