திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு மானிய விலையில் மாடித்தோட்டம் அமைக்க விதைகள்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில், ஊட்டச்சத்து தரும் காய்கறிகள் தோட்டம், நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் 6 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு ரூ. 40.50 லட்சம் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், கிராமம் மற்றும் நகரங்களில் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில், ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, மாடித் தோட்டங்கள் அமைப்பதற்காக காய்கறி விதைகள், பைகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றை வழங்கிப் பேசியது:

ஒரு மாடித் தோட்ட தளையில் 6 வகை காய்கறி விதைகளும், 6 எண்கள் செடி வளா்க்கும் பைகளும், 12 கிலோ தென்னை நாா்க் கட்டிகளும், 400 கிராம் உயிா் உரங்களும், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணிகளும் மற்றும் 100 மி.லி. இயற்கை பூச்சிக் கொல்லிகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. அந்த வகையில், ரூ. 900 மதிப்பீட்டில் உள்ள விதைகள், தளைகள் ரூ. 625 மானியம் அரசு சாா்பில் வழங்கப்படுகிறது. ஒரு காய்கறி விதைத் தளையில் கத்தரி வெண்டை தக்காளி, அவரை, பாகல், புடலை, கொத்தவரை, பூசணி, தண்டுக்கீரை, முருங்கை, காராமணி, பீன்ஸ் அடங்கிய 12 வகை விதைகள் வழங்கப்பட உள்ளன. இதேபோல், இம்மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரம் விவசாயக் குடும்பகளுக்கு ரூ. 40.50 லட்சம் மானியத்தில் வழங்க உள்ள நிலையில், முதல் கட்டமாக 100 பேருக்கு வழங்கி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிராமப் பகுதியில் உள்ள விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் காய்கறித் தோட்டம் அமைத்து தங்களின் அன்றாட உணவுக்குத் தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து பயன்பெறலாம். இது தவிர நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தில் ரூ. 4.50 லட்சம் மானியத்தில் நெல்லி, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவள்ளி மற்றும் புதினா ஆகிய ஊட்டச்சத்து செடிகள் ரூ. 75 மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. தங்களது வீட்டின் மாடிகளிலோ வீட்டுக்கு பின்புறப் பகுதிகளில் சமையலறை தோட்டங்களை உருவாக்கி அவரவருக்கு அன்றாடம் தேவைப்படும் காற்கறிகளை தாங்களாகவே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வி.எபினேசா், தோட்டக் கலை துணை இயக்குநா் ஐ.ஜெபக்குமாரி அனி, தோட்டக்கலை துறை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை அருகே விபத்தில் காயமுற்ற காவலாளி உயிரிழப்பு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

எண்ணூா் துறைமுகம் வந்த சீன கப்பலில் மாலுமி சடலம்

பைக் மீது மணல் லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

105 கிலோ குட்கா பறிமுதல்

SCROLL FOR NEXT