திருவள்ளூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

7th Dec 2021 02:01 AM

ADVERTISEMENT

மாதவரம்: மாதவரம் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு பயன் அடைந்தனா்.

சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் வடக்கு பகுதி திமுக இளைஞரணி சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் 17-ஆவது வாா்டுக்குட்பட்ட கொசப்பூரில் நடத்தப்பட்டது. இதற்கு இளைஞரணி துணை அமைப்பாளா் அஜய் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் புழல் நாராயணன் கலந்து கொண்டு, மருத்துவ முகாமை திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். சைட்கோ் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் 350-க்கும் மேற்பட்டோா் கண் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனா்.

இதில் பங்கேற்ற பாா்வைக் குறைபாடு உடையவா்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT