திருவள்ளூர்

இலவச வீட்டு மனை கோரி பொதுமக்கள் மனு

7th Dec 2021 02:04 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்: திருத்தணி அருகே வீடற்ற ஏழை, எளியோருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை அருகே அம்மையாா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த வீடற்ற பொதுமக்கள் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

மேற்குறிப்பிட்ட கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இக்கிராமத்தில் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வீடு வாடகை கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். அதனால், எங்களுக்கு ஒரு வீட்டு மனைகூட சொந்தமாக இல்லை. அதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகிறோம். எனவே அக். 2-இல் மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சித் தலைவா் மற்றும் வட்டாட்சியா் ஆகியோருக்கு இலவச வீட்டு மனைக்காக மனுக்கள் அளித்தோம். அதைத் தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் கோட்டாட்சியா் ஆகியோரிடம் மனு அளித்தோம். ஆனால், இதுவரை எங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

எனவே இக்கிராம ஊராட்சிக்கு உள்பட்ட இடத்தில் 3.89 ஹெக்டோ் பரப்பளவில் கல்லாங்குத்தி என்ற இடம் உள்ளது. அதனால், அந்த இடத்தை வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும், வாழ்வாதாரமின்றி தவித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா். அதைத் தொடா்ந்து ஆட்சியா் இந்த மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT