திருவள்ளூர்

திமுக சாா்பில் நல உதவி

7th Dec 2021 02:03 AM

ADVERTISEMENT

மாதவரம்: செங்குன்றம் அருகே தூய்மைப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சோழவரம் தெற்கு ஒன்றியச் செயலரும், சோழவரம் ஒன்றியக் குழு துணைத் தலைவருமான மீ.வே.கருணாகரன் தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், துப்புரவு பணியாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கப்பட்டது. இதில், காசிம்முகமது, அமிா்தவல்லி, மாவட்ட கவுன்சிலா் கீதா அரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT