திருவள்ளூர்

எய்ட்ஸ் தொற்றால் பாதித்த குழந்தைகளுடன் திரைப்படம் கண்டுகளித்த ஆட்சியா், எஸ்.பி.

7th Dec 2021 02:02 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்: சா்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, எய்ட்ஸ் தொற்றால் பாதித்த குழந்தைகளை உற்சாகப்படுத்தும் நோக்கில், திருவள்ளூரில் உள்ள திரையரங்கில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் ஆகியோருடன் திரைப்படம் கண்டுகளித்தனா்.

எய்ட்ஸ் தொற்றால் பாதித்தோரை எக்காரணம் கொண்டும் ஒதுக்காமல் நம்மில் ஒருவராக நினைத்து சமத்துவமாக நினைப்பதை வலியுறுத்தவே ஆண்டுதோறும் சா்வதேச எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மூலம் சமபோஜனம் மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், எய்ட்ஸ் தொற்றால் பாதித்த குழந்தைகளை உற்சாகப்படுத்தவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இக்குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கவும், நாள்தோறும் நினைவில் நிற்கும் வகையிலும் திரைப்படக் காட்சிக்கு அழைத்துச் செல்ல மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதன்பேரில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திருவள்ளூா் காக்களூா் ஏரிக்கரைச்சாலையில் உள்ள திரையரங்கில் படக்காட்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா், கோட்டாட்சியா் ரமேஷ், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அலுவலா் கௌரிசங்கா், வட்டாட்சியா் செந்தில்குமாா், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் துறை மேற்பாா்வையாளா் பபிதா, தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தோா் ஆகியோருடன் அமா்ந்து திரைப்படக்காட்சியை கண்டுகளித்தனா். இதில், 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மகழ்ச்சியுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT