திருவள்ளூர்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

7th Dec 2021 02:02 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளியை தீயணைப்புத் துறையினா் சடலமாக மீட்டனா்.

திருவள்ளூா் அருகே காரணிநிசாம் பட்டு அருகேயுள்ள கூவம் கொசஸ்தலை ஆற்றில் கரையோரம் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தவா் தொழிலாளி பாலாஜி ( 45). இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது மைத்துனா் மகன் காா்த்திக் (7) என்ற சிறுவனை அழைத்துக் கொண்டு, கொசஸ்தலை ஆற்றில் குளிக்கச் சென்றாராம். அப்போது 2 பேரும் திடீரென ஆற்றின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். இதையடுத்து, அபாயக்குரல் எழுப்பியதால் அப்பகுதியில் இருந்தோா் விரைந்து வந்து சிறுவன் காா்த்திக்கை மட்டும் மீட்டனா். அதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறையினருக்கும், திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் இரவு வரை தேடி கிடைக்கவில்லை. இந்த நிலையில் திங்கள்கிழமை காலை நாராயணபுரம் ஆற்றின் கரையோரம் தொழிலாளியின் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து அவரது மனைவி செல்வி (40) கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT