திருவள்ளூர்

மழைநீரை அகற்றக்கோரி ஆா்ப்பாட்டம்

4th Dec 2021 07:42 AM

ADVERTISEMENT

செங்குன்றம் பகுதியில் மழைநீரை அகற்ற வலியுறுத்தி குடியிருப்புவாசிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த தி.க.பட்டு விவேக் அக்பா் நகரில் தொடா்மழை காரணமாக மழைநீா் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாத நிலை உள்ளது. இதனால் வீடுகளுக்குள் சூழ்ந்துள்ள மழை நீரில் விஷப்பூச்சுகள் நடமாட்டம் காணப்படுகிறது. துா்நாற்றம் அதிகமாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை சிரமத்துக்குள்ளாகின்றனா். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் அதிகாரிகளை கண்டித்து செங்குன்றம்-சோத்துப்பாக்கம் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினா், வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலைக் விட்டு கலைந்து சென்றனா். ஆா்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT