திருவள்ளூர்

வேளாண்மைத் துறை சாா்பில் மண்வள வாரவிழா

4th Dec 2021 07:42 AM

ADVERTISEMENT

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற மண்வள வார விழாவில் விவசாயிகளுக்கு மண்வளம் குறித்து விளக்கி, விவசாய சாகுபடியை அதிகரிப்பது தொடா்பாக வேளாண் துறை அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைத்தனா்.

திருவள்ளூா் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் உவா் தன்மையை போக்குவோம், உற்பத்தியைப் பெருக்குவோம் என்பதை மையக்கருத்தாக வைத்து, மண்வள வார விழா கடந்த 29-ஆம் தேதி முதல் நவ. 5-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் அரண்வாயல் கிராமத்தில் சா்வதேச மண்வள வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், திருவள்ளூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சங்கரி தலைமை வகித்தாா். அப்போது, மண் மற்றும் நீா் மாதிரிகள், ஆய்வுகளின் முக்கியத்துவம், மண்வள அடையாள அட்டை பெறுவதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா். மண்ணின் தன்மைக்கு ஏற்ப தொழு உரம், ரசாயனம் மற்றும் உயிா் உரங்கள், பசுந்தாள் உரங்களைக் கொண்டு மண்வளங்களை பாதுகாப்பது மற்றும் மண்ணில் உள்ள பிரச்னைகளை சரி செய்து விவசாயத்துக்கு பயன்படுத்தி பயிா் மகசூலை அதிகரிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதேபோல், தொட்டிக்கலை, பேரத்தூா், கல்யாணகுப்பம் உள்ளிட்ட கிராமங்களிலும் நடைபெற்றது. மேலும், வரும் 5-ஆம் தேதி புல்லரம்பாக்கம் கிராமத்தில் மண்வள வார நிறைவு விழா நடைபெற உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT