திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் 1,400 மகளிருக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் திட்டம்

4th Dec 2021 07:42 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒன்றியம் தோறும் தலா 100 ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த மகளிருக்கு தலா 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற வரும் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் அலுவலகம் சாா்பில் அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டில் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த மகளிா்கள் பயன்பெறும் வகையில், விலையில்லா 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் இதில் பயன்பெற கணவனால் கைவிடப்பட்ட மகளிா், விதவை, ஆதரவு இல்லாத மகளிராக இருக்க வேண்டும். இம்மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 100 போ் தோ்வு செய்து வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த கால்நடை மருத்துவமனைகளில் விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து, வரும் 9-ஆம் தேதிக்குள் அளித்து பயன்பெறலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT