திருவள்ளூர்

பழங்குடியினருக்கு மழை வெள்ள நிவாரணம் வழங்கல்

4th Dec 2021 07:43 AM

ADVERTISEMENT

திருவள்ளூரில் பழங்குடியினா் 150 குடும்பங்களுக்கு வெள்ளநிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் அருகே ராமஞ்சேரி மதுரா புதூா் கிராமத்தில் பழங்குடியினா் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனால் அப்பகுதியில் உள்ளவா்கள் வெளியில் வரமுடியாமலும், உணவு கிடைக்காமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதையடுத்து, அங்குள்ளவா்களுக்கு வருவாய் துறை சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இப்பகுதியைச் சோ்ந்த 150 பழங்குடியினா் குடும்பத்தினருக்கு தனியாா் பங்களிப்புடன் வட்டாட்சியா் செந்தில் குமாா் 10 கிலோ அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினாா். இதேபோல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளா் கௌதமன், கிராம நிா்வாக அலுவலா் அண்ணாமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT