திருவள்ளூர்

மங்கலம் கிராமத்துக்கு படகு போக்குவரத்து தொடக்கம்

3rd Dec 2021 07:29 AM

ADVERTISEMENT

ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மங்கலம் கிராமத்துக்கு படகு போக்குவரத்து தொடக்கப்பட்டது,

ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணி அருகாமையில் அமைந்துள்ள மங்கலம் ஊராட்சி அமைந்துள்ளது , ஆரணி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள கிராமம் என்பதால் ஆற்றில் வெள்ளம் வரும் சமயங்களில் பொதுமக்கள் அத்தியாவாசியப் பொருள்களை வாங்க மிகவும் சிரமப்பட்டு வருவது வழக்கம்.

தற்போது வட கிழக்குப் பருவ மழையால், ஆற்றில் 25 நாள்களுக்கு மேலாக கரை புரண்டு ஓடுகிறது, இதனால் கடந்த சில தினங்கள் முன்பு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஆரணி ஆற்றை கடக்க படகு போக்குவரத்து தொடக்கப்பட்டது.

இதனை புதுப்பாளையம், காரணி , மங்கலம் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயன்படுத்தி வந்தனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கும்மிடிபூண்டி சட்ட பேரவை உறுப்பினா் டி.ஜே . கோவிந்தராஜன் ஆரணி ஆற்றில் படகு போக்குவரத்தை பாா்வையிட்டு படகில் பயணிக்கும் பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, ஊராட்சி மன்றத் தலைவா் சுரேஷ், பூண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளா் சந்திர சேகா், கும்மிடிபூண்டி மணிபாலன், முன்னாள் கவுன்சிலா் கரிகாலன், முன்னாள் நகரச் செயலாளா் கண்ணாதாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT