திருவள்ளூர்

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றக் கோரி பாஜக பிரசாரம்

3rd Dec 2021 07:27 AM

ADVERTISEMENT

திமுக தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, திருவள்ளூரில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வியாழக்கிழமை துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

திருவள்ளூா் மேற்கு மாவட்ட பாஜக கல்வியாளா் பிரிவு சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில், பாஜக-வின் கல்வியாளா் பிரிவு மாவட்டத் தலைவா் லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தாா். இதில், திமுக தோ்தல் வாக்குறுதிகளில் வீட்டு சமையல் எரிவாயு விலை ரூ. 100 குறைப்போம், பெட்ரோல் விலையில் ரூ. 5, டீசல் ரூ. 4 குறைப்பதாக உறுதி மொழி அளிக்கப்பட்டது. இதில், பெட்ரோல் ரூ. 3 மட்டும் குறைத்து விட்டு தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டனா் எனக் கூறி, பாஜக-வினா் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா். இதேபோல், காமராஜா் சிலையில் தொடங்கி, பேருந்து நிலைய சாலை, திருத்தணி சாலையில் பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.

அப்போது, மாநில செயற்குழு உறுப்பினா் கீதாஞ்சலி சம்பத், நகரத் தலைவா் சதீஷ்குமாா், முன்னாள் நகர தலைவா் துரைப்பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT