திருவள்ளூர்

பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவருக்கு அறிவுரை

3rd Dec 2021 07:30 AM

ADVERTISEMENT

ஓடும் பேருந்தின் பின்பக்கம் உள்ள ஏணியில் ஏறி பயணித்த மாணவருக்கு போக்குவரத்துத் துறை இணை ஆணையா் ரவிச்சந்திரன் அறிவுரை வழங்கினாா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அரசு பள்ளியைச் சோ்ந்த மாணவா், பொன்னேரி-சத்தியவேடு சென்ற அரசு பேருந்தின் பின்பக்க இரும்பு ஏணியில் நின்று ஆபத்தான முறையில் பயணித்த விடியோ இணையத்தில் பரவியது.

இதனை கண்ட போக்குவரத்து துறை இணை ஆணையா் ரவிச்சந்திரன் வியாழக்கிழமை பள்ளிக்கு விரைந்து, அந்த மாணவரை அழைத்து பேசினாா். அப்போது, அவா் கூறியது:

ஆபத்தான முறையில் பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணிப்பது தவறானதாகும். பேருந்தின் பின்னால் உள்ள ஏணியில் நின்று பயணிப்பதும் உயிருக்கே ஆபத்தை தரும் என்றாா்.

ADVERTISEMENT

பின்னா், நன்கு படிக்க உற்சாகப்படுத்தும் வகையில் மாணவருக்கு கல்வி உபகரணங்களை பரிசாக வழங்கினாா்.

அப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலா் இளமுருகன், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜராஜேஸ்வரி, மாணவனின் பெற்றோா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT