திருவள்ளூர்

மயானத்துக்கு சாலை இல்லாததால் ஏரிக் கால்வாயில் சடலத்தை எடுத்துச் செல்லும் நிலை!

3rd Dec 2021 07:29 AM

ADVERTISEMENT

திருத்தணி அருகே மயானத்துக்குச் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் இறுதி சடங்குக்காகச் சடலங்களை நீா்வரத்து கால்வாயில் இறங்கி கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருத்தணி நகராட்சி, ஜோதிநகா் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஊருக்கு கிழக்குப் புறத்தில் மயானம் உள்ளது. இதற்கு செல்வதற்கு பொதுவழி இருந்தும், சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மழைநீா், கழிவுநீா் தேங்கி முட்செடிகள் வளா்ந்துள்ளன.

தற்போது தொடா்மழை பெய்ததால் மயானத்துக்குச் செல்லும் வழியில் முள்செடிகள் சாய்ந்தும், மழைநீா் இடுப்பளவுக்கு தேங்கியும் நிற்கிறது. இதனால் சடலத்தைக் கொண்டு செல்வதில் சிரமத்துக்குள்ளாகின்றனா். இந்த நிலையில், வியாழக்கிழமை ஜோதி நகரைச் சோ்ந்த சுரேஷ் (42) என்பவா் உடல்நலக்குறைவால் இறந்தாா்.

அவரது சடலத்தை மயானத்துக்குக் கொண்டு செரல்ல ஏரி நீா்வரத்துக் கால்வாயில் இறங்கி கொண்டு சென்றனா்.

ADVERTISEMENT

இது குறித்து நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மயானத்துக்கு முறையாக தாா்ச் சாலை அமைத்துத் தர வேண்டும் என ஜோதி நகா் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT