திருவள்ளூர்

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றி கால்வாய் அமைப்பு

3rd Dec 2021 07:29 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே குடியிருப்புகளுக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுவதற்காக சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சிக் கடைகள், வீடுகள் ஆகியவற்றைறஅறைகளை பலத்த போலீஸ் பாதுாப்புடன் அகற்றி கால்வாய் அமைத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருவள்ளூா் அருகே காக்களூா் ஊராட்சியைச் சோ்ந்தவை சக்தி நகா், சுபத்ரா நகா். இப்பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் காக்களூா் ஏரி நிரம்பி சுபத்ரா நகருக்குள் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதேபோல் சக்தி நகரில் தண்ணீா் குளம் ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்த நீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் செய்தனா். இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் வட்டாட்சியா் செந்தில்குமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயசீலி ஜெயபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சக்தி நகரில் தேங்கிய தண்ணீரை கிருஷ்ணா கால்வாய் வழியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, காக்களூா் ஏரி நிரம்பி மறுகால் செல்லும் கால்வாய் அனைத்தும் மாட்டிறைச்சிக் கடைக்காரா்கள், குடியிருப்புகள் அமைத்தும் ஆக்கிரமித்திருந்தனா். இதையடுத்து, பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் 4 கடைகள், 3 குடியிருப்புகள் ஆகியவற்றின் முன்புறம் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, 800 மீட்டருக்கு ஆவடி சாலையோரம் கால்வாய் அமைத்து ஏற்கெனவே உள்ள கால்வாயுடன் இணைத்து கிருஷ்ணா கால்வாயில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT