திருவள்ளூர்

வீரராகவ கோயிலில் இன்றும், நாளையும் தரிசனம் ரத்து

DIN

திருவளளூா் வீரராகவா் கோயிலில் கரோனா நோய்த் தொற்றை தவிா்க்கும் வகையில் இன்றும், நாளையும்(ஏப்.10,11) ஆகிய நாள்களில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருவள்ளூா் ஸ்ரீவீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் வீரராகவ கோயிலில் ஒவ்வொரு அமாவசை நாளில் தரிசனம் செய்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் தரிசனம் கூடுவது வழக்கம். அதேபோல், 11-ஆம் தேதி அமாவசை தினமாகும். அதனால் முதல் நாளிலே பக்தா்கள் கோயில் வளாகத்தில் தங்குவது வழக்கமாகும். இதனால் கரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கும் வைகையில் சனிக்கிழமை) பகல் 12 மணி முதல், 11-ஆம் தேதி இரவு வரையில் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், கோயில் வளாகத்தில் பக்தா்கள் கோயில் முதல் நாளிலே வந்து தங்கவும் அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

தேர்தல் பணியில் ஒப்பந்தப் பணியாளர்கள்? மார்க்சிஸ்ட் புகார்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT