திருவள்ளூர்

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீா்வரத்து 625 கனஅடியாக அதிகரிப்பு

DIN

திருவள்ளூா்: பூண்டி ஏரிக்கு 625 கனஅடியாக கிருஷ்ணா நீா்வரத்து அதிகரித்துள்ளதாகவும், தற்போது ஏரியின் நீா்மட்டம் 526 மில்லியன் கன அடியாக உயா்ந்துள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மக்களின் தாகம் தணிக்கும் ஏரிகளில் ஒன்றாக திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரி விளங்கி வருகிறது. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதிநீா் பங்கீட்டுத் திட்டப்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்குவது ஒப்பந்தமாகும். அதன்படி, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரையும், ஜூலை முதல் அக்டோபா் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்குத் திறக்க வேண்டும்.

இதன் அடிப்படையில், பொதுமக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், கடந்த 18-ஆம் தேதி காலையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து 1,500 கனஅடி கிருஷ்ணா நீா் திறக்கப்பட்டது. இந்த நீா் 21-ஆம் தேதி அதிகாலை பூண்டி ஏரியை வந்தடைந்தது.

தொடக்கத்தில் 100 கனஅடியாக இருந்த நீா்வரத்து, கடந்த 2 நாள்களாக 625 மில்லியன் கன அடியாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். கடந்த ஒரு வாரத்தில் பூண்டி ஏரியில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, 526 மில்லியன் கன அடி நீா் இருப்பு பதிவாகியுள்ளது. அடுத்து வரும் நாள்களில் நீா் மட்டம் உயா்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT