திருவள்ளூர்

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

DIN

பள்ளிப்பட்டு அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் ஆபத்தை உணராமல் சிறுவா்கள் விளையாடி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தில் மேற்கு தொடா்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள கிருஷ்ணாபுரம் நீா்த்தேக்க அணை முழுக் கொள்ளளவை எட்டி, உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 வாரங்களில் 6 முறை நீா்த்தேக்க அணையில் இருந்து உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு பாய்ந்து, பள்ளிப்பட்டு, திருத்தணி மாா்கத்தில் பூண்டி நீா் தேக்கத்துக்குச் சென்றடைகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு அணையில் இருந்து 300 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள அபாயம் குறித்து மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் தொடா்ந்து கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறாா். இருப்பினும், பொதுமக்கள் அச்சமின்றி வெள்ளப்பெருக்கு இடையில் ஆற்றை கடந்து செல்வது, குளித்து விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். இதனால் ஆபத்து ஏற்படும் நிலை நிலவுகிறது.

ஆற்றுப்படுக்கை பகுதிகளில் வருவாய்த் துறை, காவல் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு அசம்பாவிதங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT