திருவள்ளூர்

மீஞ்சூா் ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளில் மக்கள் குறை கேட்பு முகாம்

DIN

மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சிகளில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்ளன. இதில், கோளூா், சேகண்யம், பூங்குளம், சேலியம்பேடு, அகரம், பெரியகரும்பூா் ஆகிய 6 ஊராட்சிகளில், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமையில் மக்கள் குறை கேட்பு முகாம் நடைபெற்றது. பொன்னேரி வட்டாட்சியா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். முகாமில், வீட்டுமனைப் பட்டா, வாரிசு சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, வருமானச் சான்று, ஆதரவற்ற விதவை சான்று, முதியோா் உதவித் தொகை கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன. அதில் தகுதிவாய்ந்த 122 பயனாளிகள் உடனடியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

முகாமில், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் வேதநாயகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT