திருவள்ளூர்

சோழவரம் அருகே ரூ. 3 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

DIN

பொன்னேரி: சோழவரம் அருகே ரூ. 3 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள அலமாதி, எடப்பாளையம், சோழவரம் ஏரி பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை, சிலா் வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்ய முயல்வதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், பொன்னேரி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையில் அங்கு சென்ற, வருவாய்த் துறையினா், மேற்கண்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசுக்குச் சொந்தமான 80 சென்ட் நிலத்தை மீட்டு, அங்கு எல்லைக் கற்களை பதித்தனா். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 3 கோடியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT