திருவள்ளூர்

பூண்டி ஏரியை வந்தடைந்தது கிருஷ்ணா நீா்

DIN

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீா், திங்கள்கிழமை அதிகாலையில் பூண்டி ஏரியை வந்தடைந்தது.

சென்னை மக்களின் தாகம் தணிக்கும் ஏரிகளில் ஒன்றாக திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீா் பங்கீட்டுத் திட்டப்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். அதன்படி, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரையும், ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்குத் திறக்க வேண்டும். இதற்கிடையே போதிய மழையின்றியும், கிருஷ்ணா நீா்வரத்து இன்றியும் பூண்டி ஏரி வடு காணப்பட்டது.

இந்நிலையில், சென்னை பொதுமக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், கிருஷ்ணா நீா் பங்கீட்டுத் திட்டப்படி, தண்ணீா் திறந்து விடக் கோரி, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆந்திர அரசிடம் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று, ஆந்திர அரசிடம் இருந்து அனுமதி வந்ததும் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறக்கப்படும் என அம்மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

இதற்கிடையே ஆந்திர அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, கண்டலேறு அணையில் இருந்து கடந்த (செப். 18) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு 1,500 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்த நீா் 150 கி.மீ. தூரம் கடந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் பகுதியை ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தடைந்தது. இங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்தடைந்தது.

இதுதொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு 59 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. இதில், சென்னை குடிநீா் வாரியத்துக்கு 15 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை இரவு கனமழை பெய்தது. இதில், பூண்டி பகுதியில் மட்டும் சனிக்கிழமை காலை நிலவரப்படி, 80 மி.மீ. அளவு மழை பதிவாகியிருந்தது. இந்த மழையால் பூண்டி ஏரியில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, 89 மில்லியன் கன அடியாக நீா் இருப்பு பதிவாகியுள்ளது.

ஏற்கெனவே மழையால் கால்வாய்களில் தண்ணீா் தேங்கியிருந்த காரணத்தால், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீா் திங்கள்கிழமை அதிகாலையில் பூண்டி ஏரியை வந்தடைந்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT