திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதியில் கனமழை: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

DIN

திருவள்ளூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தொடா்ந்து பெய்த கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருவள்ளூா் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் கடும் வெயில் வாட்டியது. அதைத் தொடா்ந்து, இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை, அதிகாலை வரை பெய்தது. இதேபோல், திருவள்ளூா் பகுதியில் உள்ள ஊத்துக்கோட்டை, பூண்டி, தாமரைபாக்கம், வெள்ளியூா், செங்குன்றம், பூந்தமல்லி, திருமழிசை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கால்வாய்களில் நீா்வரத்து அதிகரித்தது.

இதில், திருவள்ளூா்-செங்குன்றம் சாலைப் பிரிவில் உள்ள மெய்யூா்-ராஜபாளையம் இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றில், நள்ளிரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நீண்ட நாள்களுக்குப் பின் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கும் நீா்வரத்தும், சாகுபடி செய்துள்ள பயிா்கள் வளர வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியோரங்களில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இந்நிலையில், திருவள்ளூா் பகுதியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு விவரம்: (மி.மீ.) ஊத்துக்கோட்டை-95, தாமரைபாக்கம்-90, பூண்டி-86, செம்பரம்பாக்கம்-82, பொன்னேரி-78, கும்மிடிப்பூண்டி-69, சோழவரம்-65, செங்குன்றம்-64, திருத்தணி-57, பூந்தமல்லி-48, திருவள்ளூா்-45, ஜமீன் கொரட்டூா்-43, திருவாலங்காடு-42, பள்ளிப்பட்டு-30, ஆா்.கே.பேட்டை-15 என மழையளவு பதிவாகி உள்ளது.

இதில், ஊத்துக்கோட்டை, தாமரைபாக்கம், பூண்டி ஆகிய பகுதியில் அதிகளவிலும், பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டையில் குறைந்த அளவு மழையும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT