திருவள்ளூர்

ஜெயபுரம் கிராமப்பகுதியில் பாஜக கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

20th Sep 2020 06:25 PM

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் ஜெயபுரம் கிராமப்பகுதியில் பாஜக கொடியை ஏற்றிவைத்து இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஜெயபுரம் கிராமப்பகுதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் இ.ஆர்.எஸ்.சரத் தலைமையில் பாஜக கொடியை ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர்  ஏ.கே.மூர்த்தி, கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் வினோத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். 

இதில் நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர்கள் சிதம்பரலிங்கம், ஹேமலதா, எல்லாபுரம் ஒன்றிய தலைவர் சுந்தரம், ஒன்றியச் செயலாளர் முத்துவேல், மாவட்ட இளைஞர் அணி பொதுசெயலாளர்கள் சுகுமாரன், திவாகரன், இளைஞர் அணி பொருளாளர் சந்துரு, மாவட்ட மகளிரணி தலைவி ஷோபனா, மாவட்ட  பட்டியலின எஸ்சி அணி செயலாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப தலைவர் கற்குவெல்ராஜ், மாவட்ட விவசாய அணி தலைவர் சுகுமார், தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாவட்ட துணை தலைவர் பாலாஜிபத்மநாபன், மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்ச்சியின் போது தேமுதிக கட்சி சார்ந்த நிர்வாகி வாசுதேவன் தலைமையில் கொண்ட தேமுதிக கட்சியில் இருந்து சுமார் 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் ராஜா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு மாவட்ட தலைவர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

ADVERTISEMENT

Tags : Tiruvallur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT