திருவள்ளூர்

திருப்பதி குடை: பெரியபாளையத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

DIN

பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகில் திருப்பதி குடை வந்து சென்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருப்பதி யாத்திரை குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திருக்குடை எடுத்துச் செல்வார்கள். இதை முன்னிட்டு இந்த ஆண்டு 16 ஆம் ஆண்டு திருப்பதி திரு குடை கொண்டு செல்லும் நிகழ்ச்சி தாமரைப்பாக்கம் கூட்ரோடு வெங்கல் வழியாக பெரியபாளையத்து அடைந்தது. 

அப்போது பெரியபாளையத்தில் பக்தர்கள்  பெருமாள் உற்சவர் வைத்த வாகனம் வந்ததும் அங்கு திரளான பக்தர்கள்  சமூக அறிவுரையை பின்பற்றி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பி  சுவாமி தரிசனம் செய்தனர். அங்கு வந்த பக்தர்களுக்கு பூபலம் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் பின்பு பாலவாக்கம் ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் இல் இரவு தங்கி இருந்து நாளை காலை யாத்திரிகள் தெரிவித்தனர். வழிநெடுகிலும் திருப்பதி கொடைக்கு பக்தர்கள் தீபாராதனைக் காட்டியும் அன்னதானம் வழங்கியும் பெருமாள் ஆசி பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT