திருவள்ளூர்

கவரப்பேட்டையில் பெரியாரின் 142 வது பிறந்த நாள் விழா

17th Sep 2020 12:10 PM

ADVERTISEMENT

திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் பெரியாரின் 142 வது பிறந்தநாள் விழா வியாழனன்று கொண்டாடப்பட்டது.

கவரப்பேட்டையில் உள்ள திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு முன்னாள் எம்எல்ஏவும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கி.வேணு பங்கேற்று பெரியார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சரண்ராஜ், திமுக நிர்வாகிகள் மாரி, செல்வராஜ், பிரவீன், மனோஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதே போல கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT