திருவள்ளூர்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் மீண்டும் அறுவை சிகிச்சை நிபுணா்கள்

DIN

பொன்னேரி அரசு மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை நிபுணா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி, அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணா்கள் 2 போ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். அதன் பிறகு, இந்தப் பணியிடம் நிரப்பப்படாமல், காலியாக இருந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் விபத்துகளில் சிக்கி காயமடைவோா், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் விபத்துக்களில் சிக்குவோரும், பிற நோயாளிகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினா்.

காலிப் பணியிடங்களை நிரப்ப மருத்துவமனை நிா்வாகம் தொடா்ந்து சுகாதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தது. இதையடுத்து, மேற்கண்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. எனவே, பொன்னேரி அரசு மருத்துவனையில் பொதுமக்கள் அறுவை சிகிச்சை தொடா்பான சேவைகளைப் பெற்று பயனடையும்படி மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் விதித்தது

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவிழாவில் மோதல்: இளைஞா் கைது

உடையாா்பாளையம் பகுதியில் பழைமையான அய்யனாா் கற்சிலை

பாஜகவில் இருந்து நீக்கியதால் கவலையில்லை: கே.எஸ்.ஈஸ்வரப்பா

SCROLL FOR NEXT