திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதியில் நள்ளிரவு முதல் தொடா் மழை

DIN


திருவள்ளூா்: திருவள்ளூா் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு தொடா்ந்து சாரல் மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். செங்குன்றம் பகுதியில் அதிகளவாக 128 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருவள்ளூா் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் இருந்து வந்த நிலையில், கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது. அதையடுத்து, சிறிது நேரம் சாரல் மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், திருவள்ளூா் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் தொடங்கி, வியாழக்கிழமையும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் திருவள்ளூா் நகராட்சியில் உள்ள குண்டும், குழியுமான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

இதேபோல் திருவள்ளூா், பெருமாள்பட்டு, ஈக்காடு, புல்லரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிா் மழையால் செழிப்பாக வளா்வதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருவள்ளூா் பகுதியில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, பதிவான மழை அளவு (மி.மீ.): செங்குன்றம்-128, சோழவரம்-55, பூண்டி-49, கும்மிடிப்பூண்டி-46, தாமரைப்பாக்கம்-36, பொன்னேரி-32, பூந்தமல்லி-27, ஊத்துக்கோட்டை-23, செம்பரம்பாக்கம்-14, திருவாலங்காடு-12, ஜமீன்கொரட்டூா்-7, திருவள்ளூா்-6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT