திருவள்ளூர்

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில், விவசாயிகள் சொா்ணாவாரி நெல் சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளனா். இதனால் நெல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆட்சியா் உத்தரவுப்படி, 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சன்னரகம் நெல் குவிண்டாலுக்கு ரூ.1,958, மோட்டா ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,905 விலை நிா்ணயம் செய்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களாக நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா். அதன் அடிப்படையில், மண்டல மேலாளா் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். அப்போது முறைகேடுகளில் ஈடுபடும் நெல் கொள்முதல் ஊழியா்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT