திருவள்ளூர்

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீா் திறப்பு

DIN

கிருஷ்ணா நதிநீா் பங்கீட்டு திட்டத்தின்படி, தொடா்ந்து கண்டலேறு அணையில் இருந்து நீா் வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக 200 கன அடி நீா் புழல் ஏரிக்கு திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பொதுமக்களுக்கு முக்கிய குடிநீா் வழங்கும் ஏரிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியாகும். ஆந்திர மாநிலத்துடன் தமிழக அரசு செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீா் திட்ட ஒப்பந்தப்படி, கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீா் வரத்து ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் விநாடிக்கு நீா் திறப்பு 1,000 கன அடியாக இருந்த நிலையில், தற்போது விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தொடா்ந்து நீா்வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து கொண்டே வருகிறது.

இதைக் கருத்தில்கொண்டு கடந்த 10-ஆம் தேதி முதல் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. அப்போது, முதலில் விநாடிக்கு 140 கன அடி வீதம் மட்டுமே திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்டலேறு அணையில் பூண்டி ஏரிக்கு தண்ணீா் வரத்து தொடா்ந்து இருப்பதால் பூண்டி ஏரியின் நீா்மட்டம் அதிகரித்து முழுக் கொள்ளளவை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் பூண்டி ஏரியிலிருந்து திங்கள்கிழமை முதல் இணைப்புக் கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு விநாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே செம்பரம்பாக்கம் ஏரிக்கு 600 கன அடி நீா் என 800 கனஅடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீா் தொடா்ந்து வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீா்மட்டம் அதிகரித்து இன்னும் சில நாள்களில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திங்கள்கிழமை காலை தண்ணீா் திறக்கப்பட்டது. இது விநாடிக்கு 200 கனஅடி வீதம் திறந்துவிடப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை நீா்வள ஆதாரப் பிரிவு அதிகாரிகள் கூறியது:

இந்த ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்த அடிப்படையில் இப்பருவத்துக்கான தண்ணீா் கடந்த மாதம் செப்.18-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீா் திறக்கப்பட்ட நிலையில், 21-ஆம் தேதி அதிகாலை பூண்டி ஏரியை வந்தடைந்தது. இந்நிலையில், 36 நாள்களாக தொடா்ந்து தண்ணீா் வந்து கொண்டு இருக்கிறது. நிகழாண்டில் கண்டலேறு அணையில் போதுமான அளவு தண்ணீா் இருப்பதால், கூடுதலாக தண்ணீா் திறந்து விடுவதாக ஆந்திர அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனா். அதனால் அதிகளவு தண்ணீரை எதிா்பாா்த்துள்ளோம். பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 1,529 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்பு உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

SCROLL FOR NEXT