திருவள்ளூர்

டிஜெஎஸ் கல்வி குழுமம் சார்பில் விஜயதசமி விழா

26th Oct 2020 01:18 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி அடுத்த  பெருவாயலில் உள்ள டிஜெஎஸ் கல்வி குழுமத்தின் சார்பில் டிஜெஎஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி இணைந்து விஜயதசமி விழாவினை நடத்தினார்கள். 

இந்த விழாவிற்கு டிஜெஎஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். நிகழ்வில் டி.ஜெ. எஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் பழனி மற்றும் டி.ஜெ.எஸ் சி பி எஸ் சி பப்ளிக் பள்ளி தாளாளர் ஜி தமிழரசன் டிஜெஎஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் முதல்வர் ஞானப்பிரகாசம், டி.ஜெ.எஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சுகாதாதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து விஜயதசமியை முன்னிட்டு டிஜெஎஸ் மெட்ரிக் பள்ளி மட்டும் டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்ந்த 50 மாணவர்களுக்கு வித்யாரம்பம் எனப்படும்  பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு அ என்ற எழுத்தை அரிசியில் எழுதவைத்து அவர்களது கல்வியை துவக்கி வைக்கும் நிகழ்வு ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற டிஜெஎஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி அவளுக்கு பரிசளித்தார் மேலும் விஜயதசமியை முன்னிட்டு டி.ஜெ.எஸ் கல்விக் குழுமத்தின் சார்பில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத ஏழை எளிய மாணவர்கள் 10 பேர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போனை டிஜெஎஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கி அவர்கள் கல்வியில் சிறப்புடன் திகழ வாழ்த்தினார்.

ADVERTISEMENT

நிகழ்வில் பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக மாணவர்கள் நாடகத்தை நடத்திக் காட்டினர். .இந்த விஜயதசமி விழாவிற்கான ஏற்பாடுகளை டிஜிஎஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் டிஜே சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளி ஆசிரியர்கள் முன் நின்று சிறப்பாக நடத்தினர்.

Tags : Tiruvallur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT