திருவள்ளூர்

ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு கடந்த 6 மாதங்களாக மாநில நிதிக்குழு மானியம் வழங்காததைக் கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பல்வேறு அரசு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக ஊராட்சிக்கு ஒதுக்க வேண்டிய மாநில நிதிக்குழு மானியம் விடுவிக்கப்படாமல் உள்ளது. இந்த தொகையை வழங்கக் கோரி,மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா்கள் நலச் சங்கத்தின் தலைவா் வாசுகி நிலவழகன் தலைமை வகித்தாா். செயல் தலைவா் நிலவழகன் முன்னிலை வகித்தாா். செயலா் பாலன், பொருளாளா் பூஷணம்பிரகாசம் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT