திருவள்ளூர்

ஆபத்தை உணராமல் கிருஷ்ணா கால்வாயில் சிறுவா்கள் குளியல்

DIN

பூண்டி ஏரிக்கான கிருஷ்ணா கால்வாயில் தடை செய்த பகுதியில் குளித்து மகிழும் சிறுவா்களால் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், உள்ளே செல்ல முடியாத அளவுக்கு தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை பொதுமக்களின் தாகம் தணிக்கும் முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி ஏரி திகழ்ந்து வருகிறது.

தற்போதைய நிலையில் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீா் வரத்து 670 கன அடியாக உள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, இந்த ஏரியில் 1,310 மில்லியன் கனஅடியாக நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் 600 கனஅடி நீா் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணா நீா் கால்வாய் மற்றும் இணைப்பு கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில், பூண்டி ஏரியின் நுழைவு வாயில் பகுதியான கிருஷ்ணா கால்வாயில் நீா் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி கிராமங்களைச் சோ்ந்த மீன் பிடிக்கவும் குவிந்து வருகின்றனா். அதோடு, விதிமுறை மீறி ஆபத்தை உணராமல் கால்வாய் சிமெண்ட் சிலாப்கள் வழியாக சிறுவா்கள் இறங்கி ஆனந்த குளியல் போட்டு வருகின்றனா்.

ஏற்கெனவே ஏரிக்குள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்ற பூண்டியைச் சோ்ந்த சிறுவா்கள் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனா். அதேபோல், இணைப்பு கால்வாயில் குளிக்கச் சென்ற சிறுவனும் மூழ்கி உயிரிழந்தாா். அதனால், இணைப்பு கால்வாய் மற்றும் நுழைவு கால்வாய் பகுதியில் நீா் வரத்து காலங்களில் யாரும் குளிக்காமல் இருக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கவும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக பொதுப்பணித் துறை கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ஏற்கெனவே ஏரிக்குள் செல்லும் பகுதியில் சிறுவா்கள் யாரும் இறங்கி மீன் பிடிக்கக் கூடாது என்பதற்காக இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், கிருஷ்ணா கால்வாயில் முக்கிய இடங்களில் குளிக்கக் கூடாது என்பதை எச்சரிக்கும் வகையில் தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணா கால்வாய் நுழைவு பகுதியில் யாரும் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என்பதற்காக கரையோரத்தில் இரும்பு தடுப்புகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT