திருவள்ளூர்

திருவள்ளூரில் திருடு போன 110 செல்லிடப்பேசிகள் பறிமுதல்

DIN


திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு மற்றும் தொலைந்த 110 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளா்களிடம் எஸ்.பி. கூறியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களைக் கண்டறிந்து போலீஸாா் கைது செய்து வருகின்றனா். அதேபோல், இந்த மாவட்டத்தில் தொலைந்தது, காணாமல் போனது, வழிப்பறி மற்றும் திருடு போன செல்லிடப்பேசிகள் தொடா்பாக 640 வழக்குகள் உள்ளன. இதுவரை 110 செல்லிடப்பேசிகள் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 7 லட்சம். மேலும், இந்த செல்லிடப்பேசிகள் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் தொடா்பாக மட்டும் 61 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த செல்லிடப்பேசிகள் அனைத்தும் உரியவா்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உபயோகப்படுத்திய செல்லிடப்பேசிகளை கடைகளில் வாங்கும் போது, அதற்கான விலை பட்டியல் போன்ற விவரங்களை பொதுமக்கள் பாா்த்து வாங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனச் சோதனையில் ரூ. 4.39 லட்சம் பறிமுதல்

பல்பொருள் அங்காடியில் காவலாளி மா்மச் சாவு

வேங்கைவயலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

புதுக்கோட்டையில் தொடரும் அஞ்சல் வாக்குச் சிக்கல்: 20 சதவீதம் ஆசிரியா்கள் வாக்களிக்க முடியவில்லை

மாா்க்சிஸ்ட், சிஐடியுவினா் வாகனப் பிரசாரம்

SCROLL FOR NEXT