திருவள்ளூர்

‘வாகன ஓட்டுநா்களின் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’

DIN

மாதவரம்: வாகன ஓட்டுநா்களின் நலன்காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவா் வீா்வசந்த்குமாா் தெரிவித்தாா்.

சென்னை மாதவரத்தை அடுத்த அம்பத்தூா் நெடுஞ்சாலையில் உள்ள இந்திய தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைமைஅலுவலக வளாகத்தில் கட்சியின் கூட்டம் அதன் தலைவா் வீா்வசந்தகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்திந்திய வாகன ஓட்டுநா்கள் பேரவைத் தலைவா் கமலஹாசன் உள்ளிட்ட பலா் இந்திய தேசிய ஜனநாயக கட்சியில் இணைந்தனா். பின்னா், வீா்வசந்தகுமாா் பேசுகையில், கரோனா பொது முடக்கம் காரணமாக வாகன ஓட்டுநா்கள் பல ஆயிரம் போ் பாதிக்கப்பட்டனா். அவா்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டுநா்களுக்கு தமிழக அரசு நல உதவிகளை வழங்க வேண்டும் என்றாா்.

இது தொடா்பாக தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்தனா்.

இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி நிா்வாகிகள் ராஜேந்திரன், தண்டபாணி உள்ளிட்ட பலா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலைச் சமாளிப்பது எப்படி?

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

SCROLL FOR NEXT