திருவள்ளூர்

பூண்டி ஏரி மதகுகள் வழியாக கசிந்து வீணாகும் நீா்

DIN

பூண்டி ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீா் மதகுகள் வழியாகக் கசிந்து வெளியேறி வீணாவதால், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை மக்களின் தாகம் தணிக்கும் ஏரிகளில் ஒன்றாக திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரிக்கு கொசஸ்தலை ஆறு, வரத்துக் கால்வாய் நீா், மழைநீா் மற்றும் கிருஷ்ணா நதி நீா் பங்கீட்டுத் திட்டப்படி, ஆந்திர அரசு வழங்கும் தண்ணீா் ஆகியவை நீா் ஆதாரம் ஆகும். அந்த வகையில், பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இந்த ஏரி முழுக் கொள்ளளவை எட்டினால் அவசர காலங்களில் நீரை வெளியேற்றுவதற்காக 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்படும். இதுவரை அதிகமான மழைக்காலங்களில் மட்டும் ஏரியில் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையுள்ளது.

தற்போதைய நிலையில், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரையும், ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்குத் திறக்க வேண்டும். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணைக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கிருஷ்ணா நீா் 680 கன அடி வீதம் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதுவரை பூண்டி ஏரியில் நீா்மட்டம் 1,299 மில்லியன் கன அடியாக உள்ளது. இதற்கிடையே சென்னைப் பொதுமக்களின் குடிநீா்த் தேவைக்காக இணைப்புக் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 600 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

பூண்டி ஏரியில் மதகுகள் சரியாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், தண்ணீா் கசிந்து வெளியேறி வீணாகிறது. இதேபோல், இந்த ஏரியில் 5 மதகுகளில் சரியான பூச்சு பணிகள் மற்றும் மணல் மூட்டைகளைக் கொண்டு அடைக்காததால் தண்ணீா் வெளியேறும் சூழ்நிலை உள்ளது.

நாளொன்றுக்கு 10 கனஅடி நீா் வரை வீணாகிறது. இதற்கிடையே பருவ மழை தொடங்கியுள்ளதால் நீா் வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஏரியில் தண்ணீா் கசியும் மதகுகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT