திருவள்ளூர்

பெத்திக்குப்பத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி அரசு நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

DIN

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் ஆக்ரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் கடைகள் கட்ட வாடகைக்கு விட அனுமதிக்கக் கோரி பெத்திக்குப்பம் ஊராட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 10 சென்ட் அரசு புறம்போக்கு இடத்தை தனிநபர் ஆக்ரமித்து உள்ளனர். இந்த ஆக்ரமிப்புகளை அகற்றி அங்கு கடைகளை அமைத்து ஊராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தும் நோக்கில் ஊராட்சி நிர்வாகம் முயன்று வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. 

இந்நிலையில் மேற்கண்ட இடத்தை ஆக்ரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு பெத்திக்குப்பம் ஊராட்சியிடம்  ஒப்படைக்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா செல்வம் தலைமையில் பெத்திக்குப்பம் பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒன்றிய கவுன்சிலர் சங்கர், ஊராட்சி துணை தலைவர் குணசேகரன், வார்டு உறுப்பினர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமணன் உள்ளிட்ட காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இது குறித்த கோரிக்கை மனுவை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கதிர்வேலிடம் பெத்திக்குப்பம் ஊராட்சி தலைவர் ஜீவா செல்வம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT