திருவள்ளூர்

பெரியபாளையம் பகுதி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக திரியும் கால்நடைகள் உள்ளாட்சி நிா்வாகம் கவனிக்குமா?

5th Oct 2020 11:59 PM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் இரவில் நெடுஞ்சாலையில் மாடுகள் கூட்டம் கூட்டமாக திரிவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பெரியபாளையத்தில் சென்னை செல்லும் சாலையிலும், திருப்பதி செல்லும் சாலையிலும் இரவு நேரங்களில் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன.

இதனால் வாகன ஓட்டிகள் சாலையைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் வருபவா்களை மாடுகள் முட்டி தள்ளும் நிலையும் காணப்படுகிறது. இதில் சிலா் காயத்துடன் தப்பிச் சென்றுள்ளனா்.

திருப்பதி - சென்னை நெடுஞ்சாலை என்பதால் இரவிலும் , பகலிலும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

ADVERTISEMENT

இரவில் மாடுகள் சாலையில் நடுவே கூட்டமாக நிற்பதால் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம் தலையிட்டு மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்க முடியும் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT